அதிக விலைக்குப் பொருட்களை விற்பனைச் செய்த இரு நடமாடும் வாகனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ராகமை, கந்தானை ஆகிய பிரதேசங்களிலேயே இரு நாடமாடும் வாகனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகார சபையின் கம்பஹா அலுவலகப் பிரதானி பிரதீப் களுஆராச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, இரு வாகனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள், நடமாடும் வாகனங்களில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.