இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவுகின்ற நாட்டரிசி மற்றும் ஏனைய அரிசி வகைகளின் பற்றாக்குறையாலும், கடந்த நாட்களில் ஏற்பட்ட கடும்மழை காரணமாகவும் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் கருத்தில் கொண்டு, அரசி இறக்குமதிக்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளை நீக்குவதற்கு பொருத்தமானதென அமைச்சரவை கருதுகின்றது.
அதற்கமைய, இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரமின்றி இம்மாதம் 20ஆம் திகதி வரை எமது நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.