இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கனடாவில் இருந்து வருகை தரும் பலர், வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில், ஆளுநர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்துடன், நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர், முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் எனவும், ஆளுநர் தெரிவித்தார்.
இதன் போது, வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்தி வள திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.