இலங்கைக்கு, அமெரிக்கா மருந்துப்பொருட்கள் நன்கொடை

0
143

அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.
அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.
இலங்கைக்கு 7 லட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்படுவதோடு இது இலங்கை ரூபாவில் 279 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதாகும்.
இந்த மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை கையளிப்பதற்கான நிகழ்வு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.