இலங்கைக்கு மேலும் நிதி உதவி கிடைக்கவுள்ளது!

0
164

ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளதாக, வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா, வங்கியின் வருடாந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடைந்த பின்னர், இலங்கைக்கான கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உணவுக்கான உதவியை உறுதி செய்வதற்கும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் 200 மில்லியன் டொலர் அவசரக் கடனுக்கான உடன்படிக்கையில் அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கைச்சாத்திட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. அத்துடன் உயர் பணவீக்கம் எதிர்கொள்ளப்படுகிறது. இது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதித்துள்ளது என்று அசகாவா கூறியுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தை இறுதி செய்ய கொழும்பு நிர்வாகம் செயற்பட்டு வருவதாக தாம் நம்புவதாகவும் அசகாவா கூறியுள்ளார்.