இலங்கையின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைகின்றது என உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியின் இலங்கை – மாலைதீவுக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட்ஜெர்வோஸ் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளுக்கு மத்தியில் தாங்க முடியாத கடன் உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைகின்றது. இலங்கை பொருளாதார உறுதித் தன்மையை அடைவதற்கு கடன் மறுசீரமைப்பும் ஆழமான சீர்திருத்தத் திட்டங்களும் அவசியமானவை. தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு இலங்கை ஆழமான சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்துகின்ற இந்தத் தருணத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என பாரிஸ் ஹடாட்ஜெர்வோஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.