இலங்கையின் 5 மைதானங்களில் இளையோர் உலகக் கிண்ணம்

0
146

எதிர்வரும் ஜனவரி 13 தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து மைதானங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் பங்கேற்கவிருப்பதோடு மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியை நடத்தும் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் சிம்பாப்வேக்கு எதிராக மோதவுள்ளது. இந்தப் போட்டி ஆரம்ப நாளான ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறும்.

இதில் கொழும்பில் உள்ள ஐந்து மைதானங்களிலேயே போட்டிகள் நடைபெறவுள்ளன.

பீ. சரா ஓவல், கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம், என்.சி.சி. மைதானம், எஸ்.எஸ்.சி மைதானம் மற்றும் ஆர். பிரேமதாச மைதானங்களிலேயே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஜனவரி 30 மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிகள் மற்றும் பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.