இலங்கையில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை

0
147

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்துஇ நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பொலிஸாரிடம் பதிவு செய்யவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (11.12.2023) உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்இ

தமிழ் சமூகம் குறிப்பாக கொழும்பில் உள்ளவர்கள்இ பொலிஸாரால் பதிவு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

எந்த இனத்தவர் என்பதை பொருட்படுத்தாமல் முழு மக்களையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டிரான் அல்லாஸ் தெரிவித்தார்.

இதற்காக மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பதிவு படிவங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவரையும் எந்த நேரத்திலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இலங்கை மக்கள்தொகையின் இணையத் தரவுத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.