Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும்,விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.