இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சி

0
128

இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.


அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து
இலங்கையில் ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல்
குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழு நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை மையப்படுத்தி, மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் டீ.எல்.யூ.பீரீஸ்
தலைமையில் இடம்பெற்றது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ்,
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சிவபிரியா, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் டபிள்யூ.பீ.செவ்வந்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், வெகுசன ஊடக அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடகம் சார் விசேட நிபுணர் சதுரங்க அப்புவாராச்சி, திருகோணமலை, மட்டு-அம்பாறை ஊடகவியலாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


கலந்துரையாடலில் பங்குபற்றியோரிடமிருந்து கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்மை குறிப்பிடத்தக்கது.