இலங்கையில் விஜய் ஆண்டனி

0
145

இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் சுகததாசா உள்ளரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நிகழ்த்தவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்த விஜய் ஆண்டனி கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் ரசிகர்களை சந்தித்திருந்தார். இதன்போது பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன்,விஜய் அந்தனி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதேவேளை,சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.