இலங்கையுடனான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளின் போது இந்திய ரூபாவை பயன்படுத்துவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகள், சுற்றுலாவுக்கான செயல்முறையை செயல்படுத்தும் கணக்குகளை ஆரம்பித்த பின்னர், வர்த்தகம் மற்றும் மூலதன பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி 2022இல் இந்த செயல்முறையை செயற்படுத்திய பின்னர், இலங்கை வங்கி, ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ஏற்கனவே இந்திய ரூபாயில் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியின் பயனாக ஏனைய துறைகளிலும் அதனை விரிவுபடுத்த முடியும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.