தொடரை வென்றது இலங்கை அணி!

0
72
MELBOURNE, AUSTRALIA - FEBRUARY 20: Dushmantha Chameera of Sri Lanka is congratulated by team mates after getting the wicket of Josh Inglis of Australia during game five of the T20 International Series between Australia and Sri Lanka at Melbourne Cricket Ground on February 20, 2022 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிக பட்சமாக Kusal Mendis 86 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed, Rishad Hossain தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

175 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிக பட்சமாக Rishad Hossain 53 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Nuwan Thushara 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Nuwan Thushara இன்றைய போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிட்டதக்கது.