ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகியுள்ளன.
இறுதிப்போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறையில், இறுதிப்போட்டிக்கான ஒத்திகை போட்டியின் சாயலில் இன்றைய போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.