இலங்கை அரசாங்கம் நடுநிலையாக செயற்பட வேண்டும் : ரஷ்ய தூதுவர் கருத்து!

0
121

உக்ரைன் உட்பட பல விடயங்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம், ஒரு நடுநிலைமை கொள்கையை பின்பற்ற வேண்டும் எனவும், யாரிடம் அதிகாரம் இருந்தாலும், ரஷ்யா, அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவென் எஸ் ஜகார்யன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் தடைகள் காரணமாக, ரஷ்ய பிரஜைகள், ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ள முடியாது.

அதனால், அவர்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்கின்றனர்.

எங்கள் மீது தடைகளை விதித்தவர்கள் குறித்து, இந்த நாடுகள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

2022 யூனில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், ரஷ்யாவின் ஏரோபிளொட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், கவலை அடைகின்றோம்.

இந்த நடவடிக்கையை, எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த முடியாது.
இந்த சம்பவத்தின் பின்னர், இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை பாதிக்கப்பட்டது.

எனினும், ரஷ்யா தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பின்னர், சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரஷ்யர்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அதனால், இலங்கை அந்த தவறை மீண்டும் செய்யாது.

நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் உட்பட ஏனைய விவகாரங்கள் குறித்து, நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம்.

ஏனைய நாடுகளை, உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

உக்ரைன் உட்பட பல விடயங்கள் தொடர்பில், இலங்கை ஒரு நடுநிலைமை கொள்கையை பின்பற்ற வேண்டும் என ரஷ்யா விரும்புகின்றது.

யாரிடம் அதிகாரம் இருந்தாலும், ரஷ்யா அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளது.

இதனால், இலங்கை அரசாங்கம், நடுநிலைமை கொள்கைகயை பின்பற்ற வேண்டும்.
என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவென் எஸ் ஜகார்யன் குறிப்பிட்டுள்ளார்.