இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எதிராக போராட்டம்

0
281

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு கோரி நேற்றைய தினம், மட்டக்களப்பில்,
பாரிய அமைதி வழி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் சேவைக்கும், ஆசிரியர் தொழிற்சங்க சேவைக்கும் பொருந்தாத இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக செயலாற்றும்
உதய ரூபனை அனைத்து பதவியிலிருந்தும் நீக்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், கல்வி சமூகத்தினர், கல்வி நலன்புரி அமைப்புக்கள் மற்றும்
கல்வித்தினைக்கள அதிகாரிகள் பங்கேற்ற போராட்டம், காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்,
கடந்த வாரம் கல்வி அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, அந்த செயல்பாட்டினை கண்டிக்கும் வகையில்
போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.