இலங்கை கடன் சுமையிலிருந்து மீள தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிதேகி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உத்தியோக பூர்வ கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமைக்கு இலங்கைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதுடன் மட்டுமல்லாது , சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை வெல்வதற்கும் இந்த வி;டயம் ஒரு திருப்பு முனையாக அமையும் .
இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க தேவையாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஜப்பான் வழங்கி வருகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன் மாத்திரமல்லாது இலங்கையில் மீண்டும் ஜப்பான் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளது. அதற்கான நிதியை விடுவிக்கும் விடயத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தேவையான முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கவுள்ளது.