உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கூடவுள்ளது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணியை தெரிவுசெய்வதற்காக பிரதானமாக கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மூன்று விதமான போட்டிகளுக்கான அணித்தலைமை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.