இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த தினேஸ் சந்திமால் அப்போட்டியில் இருந்து திடீரென இடைவிலகியுள்ளார்.
அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரநிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தினேஷ் சந்திமால் விரைவில் இலங்கை திரும்ப உள்ளார்.