இலங்கை மகளிர் அணிக்கு தலைவியானார் அனுஷ்கா

0
43

அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று (06) அயர்லாந்து புறப்பட்டுச் சென்ற இலங்கை மகளிர் அணிக்கு தலைவியாக அனுஷ்கா சஞ்சிவனி செயற்படவுள்ளார்.

இலங்கை மகளிர் அணியின் தலைவியான சமரி அத்தபத்து இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹன்ட்ரட்’ மகளிர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அணியில் இருந்து விலகியுள்ள நிலையிலேயே அனுஷ்காவுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் மாத்திரமே சமரி விளையாடவில்லை. அவர் ஒருநாள் தொடரில் அணியுடன் இணையவுள்ள நிலையில் அது தொடக்கம் அவர் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இலங்கை மகளிர் அணி எதிர்வரும் ஓகஸ்ட் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் டப்ளின் நகரில் அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 போட்டிகளில் ஆடவிருப்பதோடு இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 16, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டிகள் பெல்பாஸ்ட் நகரில் நடைபெறவுள்ளது.