அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் நேற்று சந்தித்து இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்காவின் புதிய தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை மற்றும் பிராந்தியத்தில் கவனத்துக்குரிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் பிராந்திய பங்காளிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.