இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது !

0
107
மத்திய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட காரியாலய முகாமையாளரும் அலுவலக உதவியாளரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.30,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பூண்டுலோயா டன்சினன் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஒன்றின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக குறித்த இருவரும் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.