Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று(18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி , இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அப்பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வங்கிக் கிளைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.