வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்துள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து முன்னெடுத்து வரும் இதற்கான செயற்றிட்டத்தின் கீழ், தொழில் முனைவோருக்கான நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வதிவிட பயிற்சி நெறியொன்று, இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜே.கலாராணி தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையக தொழில் முனைவோர் பயிற்சி பிரிவின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட நிஸ்கோ பிரிவின் முகாமையாளர் க.சதீஸ்வரி, இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் ஹனீபா உட்பட பலரும் பங்கேற்றனர். 35 இளைஞர்,யுவதிகள் முதற்கட்டமாக இப் பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.