இ.போ.ச சாரதி மீது தாக்குதல்: நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

0
94

இலங்கைப் போக்குவரத்துச் சபையின், மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும், சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு
எதிராக களுவாஞ்சிக்குடி சாலை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலாளிகளைக் கைது செய்யக் கோரி, மட்டக்களப்பு சாலை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக
களுவாஞ்சிக்குடி சாலை ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டமும்
முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.