ஈரான் வெளிவிவகார அமைச்சர் குழுவினர் இலங்கை வருகை!

0
90

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 20 உயர் அதிகாரிகள் குழுவினர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று இரவு, இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

மூன்று நாள் பயணமாக, ஈரான் அரசாங்கத்திற்கு சொந்தமான ஐ.ஆர்.ஏ.என் 5 என்ற விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினரை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.

இந்த பயணத்தின் போது, ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.