ஈர நிலத்தை அழிப்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட அமுலாக்கம்!

0
47

சட்டவிரோத கட்டுமானங்களை அழிப்பது, ஈர நிலங்களை அழிப்பது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன. அதற்காக  அனைத்து அரச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்தார். 

ஈர நிலங்களைப் பாதுகாத்தல், அதனுடன் தொடர்புடைய பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலில் சமநிலையை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முன்மாதிரி நாடாக இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அறிவையும் சேகரித்து ஒரு திட்டத்தைத் தயாரிப்பதே இந்த பொதுவான ஒருமித்த கருத்து. சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்கு இந்த கொள்கைகளை ஒரு முன்மாதிரி நாடாக செயல்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சின் செயலாளர் கூறினார் .  

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார் .  சர்வதேச ஈரநிலப் பூங்கா  பங்களிப்புடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் முதல் மாநாடு குறித்து தெரிவிக்க இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது .  

எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இதை ஏற்பாடு செய்துள்ளது .  

உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஈர நிலப் பூங்காக்களில் இருந்து கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இலங்கை, கொரியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மார், நியூசிலாந்து, நேபாளம், ஜப்பான், அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தாய்வான், இங்கிலாந்து ஆகிய 15 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கின்றன. “சூழலுக்கு உகந்த சுற்றுலாவுக்கான ஈரநிலங்கள் மற்றும் ஈரநில மையங்கள்” என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான நிர்வாகத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதும் மாநாட்டின் நோக்கமாகும் .