ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவு நாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஈழத்தில் இதுவரை உயிர்நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டதோடு நினைவு கூரலின் போது மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.