உக்ரைன் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடித்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 30ம் திகதி உக்ரைன் தலைநகரில் கலவரமொன்றை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி உக்ரைன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும் இரணுவத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும் சதிபுரட்சி முயற்சி குழுவினர் திட்டமிட்டனர் என உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
எனினும் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு ரஸ்யாவுடன் தொடர்புள்ளதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
ஐந்து சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றமுயற்சியை உறுதிப்படுத்தும் பல பொருட்கள் ஆயுதங்கள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சதிபுரட்சி குழுவின் தலைவர் 2000பேர் அமரக்கூடிய மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இராணுவத்தினரை சேர்த்துக்கொண்டார் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் அவர்களிற்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.