உடரதல்ல தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் மீண்டும் இணைப்பு!

0
59

நுவரெலியா, நானு ஓயா, உடரதல்ல தோட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்கள் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் நேற்றும் தொழிலாளர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பணியாளர்களை தோட்ட நிர்வாகம் மீண்டும் பணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

உடரதல்ல தோட்டத்தில் தேயிலைச் செய்கையைக் கைவிட்டு அங்கு கோப்பியை பயிரிட கடந்த மாதம் களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் தீர்மானித்திருந்ததுடன் அதற்காக தேயிலை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மூன்று பணியாளர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே பணியிடை நீக்கப்பட்ட தொழிலாளர்களை பணியில் இணைத்துக் கொள்ளுமாறு தோட்ட நிர்வாகத்துடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் குறித்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.