உணவு விற்பனையகங்களில் விசேட சுற்றி வளைப்பு !

0
75
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார சபையின் விசேட சுற்றி வளைப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சஞ்ஜய இரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறும் வர்த்தக சமூகத்தினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.