உண்மைக்கும் நீதிக்குமான ஆணைக்குழு, மட்டக்களப்பில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.

0
111

உண்மைக்கும் நீதிக்குமான ஆணைக்குழுவின் இடைக்கால பொறிமுறைமைக்குமான பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை
மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.
ஆணைக்குழுவின் தலைவர் அசங்க குணவன்ச தலைமையிலான பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள்,
கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், காத்தான்குடி முஸ்லிம் சம்மேளன தலைவர்களையும்
சந்தித்தனர்.
அத்தோடு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையை போசகராக கொண்டு இயங்கும் மாவட்ட சிவில் சமூக அமைப்பினரையும்
இக் குழு சந்தித்தது.