பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.