30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”உயர்தரப் பரீட்சைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில்,25 மாவட்டங்களில் உயர்தரத்துக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல் பரீட்சை எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”. என குறிப்பிட்டார்.

அதன்படி உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,298 நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles