25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகளாவிய ரீதியில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் நியூயோர்க் முதலிடம்!

எகொனொமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யுனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலகளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயோர்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட வி‌டயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவின் அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. உலகளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபிய நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles