உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் பாலித்தவுக்கு வெண்கலம்

0
113

ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் பரா வீரர் பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் தனது 4ஆவது முயற்சியில் குண்டை 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்தே பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் பெரிய பிரித்தானிய பரா வீரர் அலெட் டேவிஸ் 15.60 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.