25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஊழல் மதிப்பாய்வு சுட்டெண்ணில் இலங்கை பின்நிலை!

ஊழலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நாடுகளின் பட்டியலில், இலங்கை 10 இடங்கள் பின்தங்கியுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், நேற்று வெளியிட்டுள்ள சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில், 2020 ஆம் ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2021 ஆம் ஆண்டில் 102க்கு சரிந்துள்ளது.
சர்வதேச ஊழல் புலனாய்வு சுட்டெண்ணானது, அரச துறை ஊழல் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் நிபுணர்களின் கருத்துக்களையும் வணிகர்களின் கருத்துக் கணிப்புகளையும் கொண்டு உலகெங்கிலும் உள்ள 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களை மதிப்பீடு செய்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் இடர் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் பிறர் உட்பட 13 வெளிப்புற ஆதாரங்களின் தரவைப் பயன்படுத்தி சர்வதேச ஊழல் புலனாய்வு சுட்டெண் கணக்கிடப்படுகிறது.
பூச்சியம் தொடக்கம் 100 வரையான புள்ளிகளைக் கொண்டு மதிப்பிடப்படுவதுடன், 0 மிகவும் ஊழல் நிறைந்தது என்றும் 100 ஊழற்றவை என்றும் பொருள்படும். 2021இல் 38 மதிப்பெண்ணை இலங்கை பெற்றிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில், 2012ஆம் ஆண்டில் அதிபட்சமாக 40 மதிப்பெண்களைப் பெற்ற இலங்கை, 2016இல் குறைந்த பட்சமாக 36ஐப் பெற்றது.
டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தலா 88 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தெற்கு சூடான் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles