எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தேர்தல் இல்லை: மனுஷ நாணயக்கார!

0
239

எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகம் கோரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்று நாட்டின் நாடாளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையான அரசாங்கம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நிரந்தரமாக செயல்படும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தேர்தல் நடத்தப்படும்.
நாடு ஸ்திரமாக இல்லாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
இப்போது அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது.
எனவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்