உணவு கிடைக்காமல், அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர் என, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம், உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கோரிக்கை விடுத்துள்ளார். அந்தவகையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, எதிர்வரும் மார்ச் மாதம் தாமதமின்றி நடத்துமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளோம். அரசாங்கம் தொடர்பில், மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை, இந்த தேர்தல் வழங்கும். வானளாவிய கட்டடங்கள், பெரும் வீதிகள் மற்றும் தொழில்நுட்பம் என்பனவற்றினால் மட்டும், ஒரு நாடு வளர்ச்சி அடைந்ததாக கருதப்பட மாட்டாது. இவ்வாறான செயற்திட்டங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, தரகுப் பணம் சேகரிக்க உதவுமே தவிர, இலங்கையின் அபிவிருத்தியில் விளைவதில்லை. உணவு கிடைக்காமல், தற்போது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அதிகாரிகளின் நடவடிக்கைகளால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.