எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

0
82

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு கிடைத்துள்ளது. இந்த கொடுப்பனவு சட்டமா அதிபர் ஊடாகவே திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதன் காரணமாக நாட்டின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்காக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஏற்பட்ட செலவு மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்க இந்த பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் 02ஆம் திகதி இலங்கை கடல் எல்லையில் தீ பற்றி எரிந்தது. இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் மீனவர்களின் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

கப்பல் தீ பற்றியதால் நாட்டின் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற விடயங்களை ஆராய்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள அமைக்கப்பட்ட நிபுணர் குழு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் டொலர்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்திருந்தது. அதன் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதன்படி, தற்போது இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் சட்டமா அதிபர் ஊடாக திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.