குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 17800ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம் என அந்நாட்டு மக்களுக்கு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
கொங்கொ குடியரசின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதார நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.