எரிபொருள் கையிருப்பு தொடர்பில், எரிசக்தி அமைச்சு விசேட கண்காணிப்பு!

0
121

கியு.ஆர் குறியீட்டு முறையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கியு.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களால் விநியோகிக்கும் அனைத்து எரிபொருள் இருப்புகளும்
மென்பொருள் மூலம் கணக்கிடப்படுகின்றன.
ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறித்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எழுத்துமூல அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கியு.ஆர் குறியீட்டு முறைக்கு வெளியே வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு குறித்து நியாயமான காரணங்கள் தெரிவிக்கப்படாவிட்டால்,
அத்தகைய நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு மட்டுப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.