எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும் – கஞ்சன

0
180

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாகனம் அல்லா எரிபொருள் தேவைக்கான QR குறியீட்டு முறைமையும் தயாராக உள்ளதென அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மின்பிறப்பாக்கிகள், புல்வெட்டும் இயந்திரங்கள் உட்பட ஏனைய இயந்திரங்களுக்கான QR குறியீட்டு முறைமைக்கான பதிவு முறைமை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.