எரிபொருள் விலையில் இன்று (1) திருத்தம் மேற்கொள்வது சாத்தியமில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுடன் ஒப்பிடும் போது, எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்தின் மூலம் திருத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் இறக்குமதி செலவை காட்டிலும் மிகவும் குறைந்த விலையிலேயே மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் நிலவியது. எனினும், குறைந்த வருமானம் பெறுவோர் மண்ணெண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்துவதால் அது சலுகை விலையில் வழங்கப்பட்டது.
இந்த சலுகையை வரையறையின்றி ஏனையோரும் அனுபவித்தமையினாலேயே நஷ்டம் ஏற்பட்டது.
உலக சந்தையில் இன்று காணப்படும் விலைக்கு, எமது இறக்குமதி செலவுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.
எனவே, இந்த செலவுகளை நோக்கிமிடத்து இன்று எரிபொருள் விலை குறைய சாத்தியமில்லை.
எவ்வாறாயினும், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இயங்க ஆரம்பித்தவுடன், விலை சூத்திரம் அடிப்படையில் மக்களுக்கு முழுமையான சலுகையை அனுபவிக்க முடியும் என்றார்.