28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எலிக்காய்ச்சல் நோயால், அதிகளவில் பெண்கள் பாதிப்பு!

எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தொற்று நோயியல் பிரிவின் ஆலோசகர், தொற்று நோயியல் நிபுணர் துஷானி பெரேரா தெரிவித்துள்ளார்.

நெற் செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் இரத்தினக்கல் சுரங்கம் போன்ற, அதிக ஆபத்துள்ள தொழில்களில் ஈடுபடும் ஆண்கள், இந்த நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.இருப்பினும், சில ஆண்டுகளாக, பெண்கள் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 9 ஆயிரம் நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு, 5 ஆயிரம் நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்.
இதில் பெரும்பாலான நோயாளர்கள், இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மொனராகலை மற்றும் குருணாகல் போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளனர்.
எலிக்காய்ச்சல் என்பது, பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீரின் மூலம் பரவும், ஒரு பாக்டீரியா தொற்று ஆகும்.

கடுமையான மழையைத் தொடர்ந்து தொற்று நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
இது, நீர் வளம் மாசுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.இந்த நோய், தசை வலி அல்லது மஞ்சள் காமாளை, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகின்றது.

நோய் கடுமையாகும் சந்தர்ப்பங்களில், சிறுநீரகம், இதயம் அல்லது சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும்.இதனால், நெற் செய்கை, இரத்தினக்கல் சுரங்கம் மற்றும் கழிவுநீர் வேலைகள் போன்ற, அதிக ஆபத்துள்ள தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என தொற்று நோயியல் நிபுணர் துஷானி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles