பொதுநலவாய நாடுகளின் தலைவரான, மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.