எலுமிச்சையின் விலை பாரியளவில் அதிகரிப்பு

0
86

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதாகவும், இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகர காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கையில், ​​

தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.