எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

0
94

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இரவு அஞ்சல் ரயிலில் எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் இன்று ரயில் பாதையில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 08.25 அளவில் எல்ல 9 வளைவு பாலத்தில் குறித்த யுவதி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதர ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.