லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இத்தொடரில் 11 நாட்கள் நடைபெற்ற 20 போட்டிகளின் அடிப்படையில் கண்டி ஃபல்கோன்ஸ், ஜஃப்னா கிங்ஸ், காலி கிளாடியேடர்ஸ், மற்றும் கொழும்பு ஸ்ரார்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. போட்டியில் அரையிறுதிச் சுற்றின் முதலாவது ஆட்டம் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபல்கோன்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி டிசம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதவுள்ளது. போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு ஸ்ரார்ஸ் மற்றும் காலி கிளாடியேடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.