ஏமன் துறைமுகம் மீது, இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மத்திய கிழக்குப் பகுதியில், தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டா மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருவதனால், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது, அண்மையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘தங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அனைவருக்கும், தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலைத் தாக்கவும், அரபு நாடுகளைத் தாக்கவும் ஈரான் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.